எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முட்டை, கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்ட போதிலும், தற்போது முட்டை விலை 55 ரூபாயிலிருந்து 65 ரூபாவரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், கோழி இறைச்சியின் விலையில் விரைவான அதிகரிப்பு பதிவாகியுள்ள அதே நேரத்தில் விற்பனையாளர்கள் எதிர்காலத்தில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், தற்போது ஒரு கிலோ வெங்காயம் உள்ளூர் சந்தையில் 440.ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் அநாவசிய இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் குழு அறிவுறுத்தியுள்ளது.