2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் ஒவ்வொன்றும் 35.ரூபாக்கு நுகர்வோருக்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை நியாயமற்ற முறையில் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் அதிக விலையைக் குறைக்கத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் என்றும் பெர்னாண்டோ கூறினார்.
இன்நிலையில், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள், பண்டிகை காலத்துக்காக உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் முடியும் வரை முட்டையை ரூ.55 க்கு கீழ் விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.