இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு!

இலங்கையில் இருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஆறு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இளநீர் தோட்டங்களை ஒரு பயிராக பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், உலகில் பல நாடுகள் இளநீர் பயிரிட முயற்சித்தாலும் உலகில் மிகவும் சுவையான இளநீர் இலங்கை இளநீர் என்றும், இலங்கையில் இளநீரை பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply