2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து மேலதிக கொடுப்பனவுகளையும் ஊழியர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை இந்த வருடத்திற்கு நிறுத்துமாறும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதை தவிர்க்குமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த இந்த நடவடிக்கையானது செயல்பாடுகள் மற்றும் நிர்வாகச் செலவுகளை மேலும் குறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்ட X
தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.