யாழ்ப்பாண மாநகர சபையின் அடாவடி! யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையினரால் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு கடைகளுக்கும் நாளொன்றுக்கு தலா 1000ரூபா வரி கட்ட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபையினால் அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் வணிகர் கழகம், வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி இலவசமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுவதாகவும் யாழ்ப்பாணம் வணிகக் கழகம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply