சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்து!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இறைச்சிப் பொருட்கள் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த இறைச்சிப் பொருட்களை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் நிலைமை சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, பன்றி இறைச்சி, சொசேஜஸ், மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியின்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எனினும், குறித்த இறைச்சிப் பொருட்கள், சந்தைக்கு விற்பனைக்கு விடவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply