2023 க.பொ.த உயர் தர பரீட்சை வினாத்தாள் குறியிடல் பணி ஆரம்பம்!

பரீட்சைகள் திணைக்களம் 2023 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, முதன்மை மதிப்பீட்டாளர்கள் உட்பட தாள் குறியிடும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே தொகையே இந்த ஆண்டும் வழங்கப்படும் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை 2,300 க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது, மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் அதிக போட்டித்தன்மை கொண்ட தேசிய தேர்வுக்கு அமர்ந்தனர்.

விண்ணப்பித்தவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்றும், மீதமுள்ள 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பரீட்சைக்கு முன்னதாக விவசாய வினாத்தாள் கேள்விகள் வெளியான நிலையில், வினாத்தாளை முழுமையாக இரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய, குறித்த பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, இன்று விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, விவசாய வினாத்தாளின் II ஆம்பகுதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், I ஆம்பகுதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply