பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வீதியில் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவம் தொடர்பில் தனது முறைப்பாட்டை வைத்தியசாலையில் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், நான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்த போது சிவில் உடையில் வந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என்னை நிற்குமாறு கூறினார். ஆனால் எனக்கு அன்று காய்ச்சல், எனவே நான் மெதுவாகவே சைக்கிள் பயணித்ததால் அவர்கள் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை. எனினும், மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறுத்தி இறங்கு எனக் கூறினார். ஏன் என கேட்டேன் என்னை அடித்தார்கள்.

மேலும், ஏன் விசாரணைக்கு பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என கேட்க, காய்ச்சல் காரணமாக வரவில்லை என்றேன் மீண்டும் என்னை தாக்கினார்கள்.

நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னை தாக்கிய இரு பொலிஸாரும் அருகில் இருந்த மதிலுடன் என்னை வீசி விட்டுச் சென்றார்கள். இந்நிலையில் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன்.

தாக்குதலில் எனது ஒரு கால் முறிந்துள்ளது.இவ்வாறு தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply