இந்த வாரம் வெளியிடப்பட்ட பகுப்பாய்வுகளின்படி, தெற்காசியாவில் இலங்கையில் தற்போது அதிக மின்சாரக் கட்டணங்கள் உள்ளன, மற்ற தெற்காசிய நாடுகளில் உள்ள குடும்பங்கள் செலுத்தும் சராசரி விலையை விட 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது.
PublicFinance.lk இல் வெளியிடப்பட்ட, இலங்கையின் முதன்மையான பொருளாதார நுண்ணறிவு தளமான, Verité Research இன் இந்த பகுப்பாய்வு, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 100, 200 அல்லது 300 யுனிட்களை பயன்படுத்தும் போது, வீடுகளின் மின்சாரத்திற்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து.
பிராந்தியத்தில் இரண்டாவது அதிக வீட்டு மின் கட்டணம் பாகிஸ்தானில் பெறப்படுகிறது. இருப்பினும் அவை இலங்கையை விட மிகக் குறைவு.
மேலும் 100 யுனிட்களை பயன்படுத்தும் குடும்பங்கள் பாகிஸ்தானை விட இலங்கையில் 50% அதிகமாக வசூலிக்கப்படுவதுடன் மேலும் 300 யுனிட்களை பயன்படுத்துவோருக்கு இலங்கையில் 97% கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையானது அதன் முழு செலவினங்களையும் நுகர்வோர் மீது அறவிடப்படும் கட்டணங்களின் கலவையிலிருந்து மீளப்பெறும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீது இலங்கை மேற்கொண்ட உறுதிப்பாட்டை அடுத்து இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.