உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இல்லத்திற்கு விஜயம் செய்த பதில் பொலிஸ் மா அதிபர் !

அண்மையில் மல்வத்து ஹிர்பிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரின்  இல்லத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று விஜயம் செய்தார்.

மறைந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு தலா 1மில்லியன் ரூபாவை இலங்கை காவல்துறை சார்பில் வழங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை  அதிகாலை படேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட முயற்சிக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் துப்பாக்கி வெடித்து அதிகாரி காயமடைந்த நிலையில் சந்தேக நபர் ஆயுதத்துடன் தப்பி ஓடினார்.

இஹல லுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்  உயிரிழந்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபர் பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள இல்லத்தில் தலைமறைவாக இருந்த வேளையில் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தருக்கு சொந்தமான ரிவோல்வர்,  9mm தோட்டாக்கள் 3 மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தலைமறைவாகுவதற்கு உதவிய பெண்ணொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply