அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தேவை மற்றும் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான பொறியியலாளர் நோயல் பிரியந்த பெப்ரவரி மாதத்துக்காக இதுவரை 46 கிகாவட் மணித்தியாலங்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி 20% கொள்ளளவிற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.