உணவுப் பொருட்களுக்கு பண்டவரி அதிகரிக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியீடு!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு  விதிக்கப்படும்   பண்ட வரி உயர்த்தப்பட்டு புதிய வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, உளுந்து இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌபி , விதை குரக்கன், தினை உள்ளிட்டவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply