நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முடியும் என்ற போதிலும் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி மிகவும் தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கு புறம்பாக தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை எனவும் 45 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.