சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர், சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதன்படி, இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.