லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு மாற்றியமைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்படவில்லை, எனவும்பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வைத் தொடர்ந்து, இப்போது லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வரும் விகிதங்களில் உள்ளன.
அதன் அடிபடையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – ரூபா 4,250 ஆகவும், 5 கிலோ கிராம் சிலிண்டர் – ரூபா 1,707 ஆகவும், 2.3 கிலோ கிராம் சிலிண்டர் – ரூபா 795 ஆகவும் விற்பணைசெய்யப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவின் மற்றுமொரு பங்காளர் நிறுவனமான லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் மார்ச் மாதத்தில் அதன் விலையை மாற்றுவதில்லை என முடிவு செய்துள்ளது.