விசேட பண்டவரி குறைப்பு – நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு!

புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தியா வெங்காய ஏற்றுமதியை இடைநிறுத்தியமையே இதற்கு காரணம் எனவும் ஜனவரி மாதத்தில் கீரி சம்பா விலை வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் ஜீ ஆர் 11 ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கேற்ப முதற்கட்ட அரிசி கொண்டுவரப்பட்டதுடன் அவை துறைகத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை அவை தேங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களுக்கு மாத்திரமே விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு இந்த நடைமுறை பொருந்தாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Rilak Shana

Leave a Reply