பொதுத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்!

பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் முடக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஒரு சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசிலின் கருத்துப்படி, ஒக்டோபர் 17இற்கு முன் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலை விட இந்தத் தருணத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அவரது கட்சிக்கு சாதகமாக இருக்கும்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் பிரகாரம் திட்டமிடப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக எந்தவொரு திடீர் பொதுத் தேர்தலுக்கும் தாம் அழைப்பு விடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறை திருத்தம் என்ற போர்வையில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எவ்வாறாயினும், பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Rilak Shana

Leave a Reply