மூதறிஞர் தந்தை செல்வாவின் 126 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு யாழில் சிறப்பு நிகழ்வு!

ஈழத்து காந்தி , மூதறிஞர் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்படும் தந்தை செல்வா(சா.ஜே செல்வநாயகம் ) என்ற இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேச பிதாவின் 126 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு எதிர்வரும்  30 .03.2024 சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் (அறங்காவலர் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை) அவர்களின் தலைமையில் தந்தை செல்வாவின் இலட்சியப்பயணம் என்ற தொணிப்பொருளில் ஜெயந்தி நிகழ்வு நடைபெறவுள்ளது.

பலதரப்பட்ட மக்களையும் சிறப்பாக இளைய சமுதாய மக்களையும் தந்தை சொல்வாவின் இலட்சிய பண்புகள் சென்றடைவதன் மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இந்நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன.

ஜெயந்தி தின நிகழ்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் தீர்க்கதரிசி தந்தை செல்வாவின் இலட்சிய பயணம் முன்னெடுத்து செல்லப்படுகின்றதா? செல்லப்படவில்லையா? என்ற கருப்பொருளில் சொற்சமர் நடைபெற்று இறுதியில் அவரால் சிறப்புரையும் நிகழ்த்தப்படவுள்ளது.

இச் சொற்சமரில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன், பிரபல பேச்சாளர்களான ந.ஐங்கரன் ,இ.சர்வேஸ்வரா ஆகிய மூவரும் தந்தை செல்வாவின் இலட்சிய பயணம் முன்னெடுத்து செல்லப்படுகின்றதென வாதிடுவதுடன், தந்தை செல்வாவின் இலட்சிய பயணம் முன்னெடுத்து செல்லப்படவில்லை என யாழ் இந்து கல்லூரி முன்னணி பட்டிமன்றப் பேச்சாளர்களான மாணவர்கள் கு.மிதுராஜ், செ.ஆராதனன்,பி.டிவேஸ் ஆகியோர் எதிர்வாதம் செய்யவுள்ளனர்.

விழா ஆரம்பத்தில் தந்தையின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றப்பட்டு ஜீவந்தனி,சுகந்தினி சகோதரரிகளினால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply