கேக் விலை தொடர்பான அறிவிப்பு!

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால், ஒரு கிலோ கேக்கின் விலையும் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவிற்கும் குறைவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் நுகர்வோர்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட முட்டை தொடர்பான பொருட்களின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Rilak Shana

Leave a Reply