நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
குறித்த நடவடிக்கையில் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதன பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
மேலும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.