2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரேமஜயந்த, தாள் குறியிடும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் தனக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
“அதன்படி, அடுத்த சில வாரங்களுக்குள் தொடர்புடைய அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை தாள் மதிப்பெண்ணில் சுமார் 35,000 பேரும், க.பொ.த உயர்தர பரீட்சை தாள் குறியிடும் நடவடிக்கைகளில் 19,000 பேரும் பங்குபற்றுவதாக தெரிவித்த கல்வி அமைச்சர், அவர்கள் அனைவருக்கும் திருப்திகரமான கொடுப்பனவு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் உறுதியளித்தார்.