வடமாகாணத்தில் உள்ள பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த சில நாட்களில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ தனபால தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நபர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடக்கு மாகாணத்தை உருவாக்குவது தனது நம்பிக்கையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இனிவரும் நாட்களில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இந்த நடைமுறை இறுக்கமாக்கப்படும் எனபதுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுகொண்டார்.