புத்தாண்டை முன்னிட்டு, உள்நாட்டுச் சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளபோதிலும் உள்நாட்டில் முட்டை விலை குறைக்கப்படவில்லை, என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பண்டிகைக்காலத்தில் பொதுமக்களின் நன்மை கருதி லங்கா சதொச விற்பனை நிலையத்தில் 36 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது.
எனினும் கடந்த காலங்களில் 40 முதல் 45 ரூபாய் வரை முட்டையொன்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் புத்தாண்டு காலத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் 50 முதல் 60 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உள்ளுரில் முட்டை விலையினைக் குறைப்பதற்கு வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்காவிடின் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.