எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களிடமிருந்தே வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மேலும், மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களும் இதையே கோரியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தக் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் வாரங்களில் இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளீர்களா என அமைச்சரை வினவியபோது, “நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, வரவிருக்கும் தேர்தல் மிகவும் வித்தியாசமாகவும், முக்கியமானதாகவும் இருக்கும். மக்கள் இனி அரசியல் கட்சிக்கு வாக்களிக்காமல், போட்டியிடும் தனிநபருக்கு வாக்களிக்கின்றனர்.” என தெரிவித்தார்.