புத்தாண்டு காலத்தில் சேவையில் ஈடுபட்ட நீண்ட தூர பேருந்துகளுக்கு எதிராக 147 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட பயண கட்டணத்திற்கு அதிகமான கட்டணத்தை வசூலித்தமை தொடர்பான புகார்களே இவற்றுள் அதிகம் எனவும், இது தொடர்பாக சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பேருந்து பயண நேரம் குறித்து 2542 பயணிகளிடமிருந்து விசாரிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1955 திறன் அழைப்புப் பிரிவுக்கு அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரண நடத்தப்படும் எனவும், புத்தாண்டிற்கு ஊர்களுக்கு சென்று வர 1500 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அதனூடே 2200 பேருந்து வழித்தடங்கள் நடைபெற்றதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புத்தாண்டு விசேட பஸ் சேவையானது எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.