இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து! மருத்துவர் சம்பா அலுத்வீர தெரிவிப்பு!

மலேரியா நோய் பரவியுள்ள நாடுகளுக்கு சென்று மீண்டும் இலங்கை திரும்புகின்ற பயணிகளின் இரத்தப் படலங்களைச் சரிபார்ப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றியடையவில்லை எனவும், ஆகையினால் அரசு மருத்துவமனை அல்லது மலேரியா எதிர்ப்பு பிரச்சார பிரிவிற்கு வந்து இரத்தப் படலங்களைப் பரிசோதிக்குமாறு மலேரியா எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் சம்பா அலுத்வீர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு துளி இரத்தத்தை சோதனை பட்டியொன்றின் மூலம் மாத்திரம் பரிசோதிக்கும்போது மலேரியா ஒட்டுண்ணியை சரியாக அடையாளம் காண முடியாது மற்றும் பிழையான மருத்துவ அறிக்கைகள் பெறப்படலாம், எனவே உடலில் உள்ள நோய்க்கிருமி ஒட்டுண்ணியா என்பதை சரியாகக் கண்டறிய நுண்ணோக்கி மூலமே இரத்தப் பரிசோதனையை சரியாக மேற்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மலேரியா ஒட்டுண்ணி இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் உடலில் மலேரியா ஒட்டுண்ணி இருந்தால் அவற்றை பரப்பக்கூடிய அனாஃபெலிஸ் வகை கொசுக்கள் இங்கு இருப்பதால் அந்த கொசுக்கள் அவற்றை காவிச் செல்வதன் மூலம் மீண்டும் நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது எனவும் மருத்துவர் சம்பா எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 9 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மலேரியா பரவியுள்ள நாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply