சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கு தடையாக உள்ளது சீனாவின் இறுக்கமான நிலைப்பாடுகளே! ரொஹான் சமரஜீவ!

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது சீனாவின் இறுக்கமான நிலைப்பாடாகும், என லேர்ன் ஏஷியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.

ஏனைய திவாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கை விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது, ஆனால் சீனாவின் இறுக்கமான நிலைப்பாடு காரணமாக வெளிநாட்டு மறுசீரமைப்பு வேலைத்திட்டம் இன்னும் உடன்பாட்டிற்கு வரவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் இந்த இயல்பானது இலங்கைக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பொதுவானது எனவும், கடனை செலுத்த அவர்கள் சலுகை வழங்குவதில்லை, எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் ஒப்பிடுகையில் செம்பியா, சுரினாம் மற்றும் லெபனான் போன்ற நாடுகளின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மந்தகதியில் காணப்படுவதாகவும், அவற்றுள் லெபனான் இந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் காரணமாக முதலீட்டாளர்கள் இலங்கைக்கு சாதகமான பிரதிபலிப்பை காட்டுவார்கள் எனவும், மறுசீரமைப்பு செயல்முறையில் உடன்பாடுகளை எட்டியதன் பின்னர், இருதரப்பு செயற்றிட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply