கடற்பரப்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 மீற்றர் (02-2.5) வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அதனால் கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply