இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று ஆரம்பம்!

அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (09) ஆரம்பமானது.

இந்த மனுக்கள் விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, நுகர்வோருக்கு வசதியான சேவையை வழங்குவதுடன் மின்சார உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை வினைத்திறனாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளதாக வலியுறுத்தினார். 

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாய்மூலமாக சமர்ப்பித்ததை அடுத்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உண்மைகளை முன்வைக்க ஆரம்பித்தனர்.

இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்ட 14 தரப்பினரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply