28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார். கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி 1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள் ‘ராமர்’ வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும் தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது: வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து, அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள், ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்; ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும் நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir