அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1,400 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.
கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.
இதேவேளை , வெள்ளை பச்சை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.
கீரி சம்பா அரிசி கிலோ ஒன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.