வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தலை கடுமையாக செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானிப்பு !

ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையினை கடுமையாக நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான செலவுகளை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் பல திணைக்களங்களுடன் தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதோடு, விதிக்கப்படும் செலவு வரம்பை மீறும் வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை வேட்பு மனு தாக்கல் செய்த 5 நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும். தேர்தல் ஒழுங்குமுறை சட்டம் முதன்முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply