என்ன நடந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடந்தே தீரும்! அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

என்ன நடந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முறையாக எல்லாமே தீர்மானிக்கப்பட்டு சரியாக நிறைவேறும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், ஜூலை 26 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தன் மூலமே நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் எனவும், எனினும் தன்னைத் தவிர பிரதமரோ அல்லது சபைத் தலைவரோ அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதற்கு எதிராக எந்தவொரு நபரோ அல்லது குழுவோ உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தீர்ப்பொன்றை பெறுவதற்கு ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை செல்லும் எனவும் அதற்குள் தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களை கோரியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

எனவே, 22 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதால் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அது நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply