பொதுத் துறையில் உள்ள சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் குழு, சம்பளப் பலன்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஏற்க தொடங்கியுள்ளது.
இதன்படி, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ள தரப்பினர் விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் http://presidentsoffice.gov.lk ஊடாக அணுகலாம்.
எவ்வாறாயினும், அனைத்து முன்மொழிவுகளும் ஆகஸ்ட் 9, 2024 க்குள் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் மூலம் PDF வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நியமித்தார்.
மூன்று மாதங்களுக்குள் தனது பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.