கொரோனாக் காலக் கட்டாய உடல் தகனம் மன்னிப்புக்கோர அமைச்சரவை அங்கீகாரம்!

கொரோனா தொற்றும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 276 இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக, நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply