நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கும் ஒலிம்பிக் போட்டிகள்!

ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு இன்று ஆரம்பமாகின்றது.

இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இரண்டுமே பாரிஸில் இடம்பெறுகின்றமை இதன் விசேட அம்சமாகும்.

இந்நிலையில் சுமார் 15,000 போட்டியாளர்கள் பங்கேற்பதுடன், 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டியிலும் 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கின்றன.

பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் கடந்த(24) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதுடன் இம்முறை இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வழமைக்கு மாறாக மைதானத்தில் ஆரம்பமாகாமல் பரிஸ் ஈபிள் டவருக்கு அருகாமையிலிருந்து கோலாகலமாக ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கோலாகலமான ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து முதல் போட்டியாக 10மீற்றர் ஏர் பிஸ்டல் பெண்கள் போட்டிக்கு முந்தைய பயிற்சி இடம்பெறும். அதனைத்தொடர்ந்து 10மீற்றர் ஏர் பிஸ்டல் ஆண்கள் போட்டிக்கு முந்தைய பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply