அரிசியால் ஏற்படப்போகும் ஆபத்து!

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.

இதன் விளைவாக அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உணவு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் 200 கிராம் அரிசியை உணவாக மூன்று வேளை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தும்.

ஒரு குறிப்பிட்ட நோயை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறினால் முறையான அறிவியல் ஆய்வு நடத்தி, நாட்டின் முக்கிய உணவு அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

ஒருவர் வாரத்திற்கு 2.8 கிலோ அரிசி, 32 கிலோ கோதுமை மா, 12 கிலோ ரொட்டிமா மற்றும் 24 கிலோ சீனி சாப்பிடுகிறார், இதனால் உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது என்று அவர் கூறினார். உணவை பன்முகப்படுத்த வேண்டும், இல்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply