பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் வன்முறை போராட்டத்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நேற்றைய தினம் (04) ஆயிர்க்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வன்முறை மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பங்களாதேஷில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை என பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் தற்போது ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.