இறப்பர் செய்கைக்காக உரமானியம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதுடன் இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக இறப்பர் செய்கை நடவடிக்கைகளுக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் வருடாந்த இறப்பர் பால் விளைச்சல் 100,000 மெட்ரிக் தொன்னில் இருந்து 65,000 மெற்றிக் தொன்னாக குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறப்பர் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையின் விலையை 9,500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply