ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தில் தற்போது வரையிலான உள்நாட்டு மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் அமர்வின் முதல் நாளான இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூலமாக விரிவான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் நாளில் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான பிரேரணையை முன்னகர்த்த வேண்டாம் எனக் கோரியுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த விவாதத்துக்குப் பின்னர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு இணையான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க பதிலளித்து உரையாற்றவுள்ளதோடு விவாதங்கள் மற்றும் இணைநிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply