யாழில் அனுஷ்டிக்கப்பட்ட மகாகவி பாரதியாரின் நினைவு தினம்!

பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் பன்முக நோக்கில் பாரதி எனும் விசேட நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது

லிங்காஸ்வர கீத இயக்குநர் ஷாஜிதா அட்ஜெயலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் சிறப்பு அதிதிகளாக வர்த்தகர் சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் பாடலாசிரியர் வெற்றி துஷ்யந்தனும் கலந்துகொண்டதுடன் மங்கலவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன

குறித்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இசை, நடனம் ,இலக்கியம் என்னும் பல்கோண பார்வையில் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

இறுதியாக கருத்தாடல் நிகழ்வானது தேசிய கல்விற் கல்லூரியின் ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி ந.ரவீந்திரன் உட்பட கலாச்சார உத்தியோகத்தர்கள்,அதிபர்கள், ஆசிரியர்கள்,தமிழ் பற்றாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply