ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தை கலைக்க முன்னர் தீர்மானித்ததன் படி ஐந்தாண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்ய முடியாத 85 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.
சட்ட விதிகளின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முழு ஓய்வூதியம் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் அடிப்படை பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதனையடுத்து அடிப்படை உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினருக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் எட்டாம் திகதியுடனேயே ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.