உலக மது ஒழிப்பு தினமான இன்று நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மதுபானக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இலங்கையை பொருத்தவரை மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபாயினை அரசாங்கம் நோயாளர்களுக்காக செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.