அண்மைக் காலமாக சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது மீண்டும் 40ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முட்டை உற்பத்தியாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,” நாட்டில் முட்டை உற்பத்தி அதிகளவில் காணப்படுகின்றது. எனினும் இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதால் மீண்டும் சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக முட்டையின் விலை உயர்வடைந்துளள்து.
இது குறித்து முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கையில் “அரசு தலையிட்டு, இந்த இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தி, முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் மீண்டும் ஒரு முட்டையை,30 ரூபாய்க்கு வழங்க முடியும்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.