ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (05) காலை ரேணுக பெரேராவின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் அவரைக் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.