
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கான 2024 (2025) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்று(10) நள்ளிரவு 12 மணி வரை நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று 12 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
2024 (2025)இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 05 முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்த போதும் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.