இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்! விபரங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் அதானி குழுமம், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் பல துறைகள் மூலம் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த திட்டங்களில் அதானி குழுமம் ஏற்கனவே சில முதலீடுகளை செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடிப்படையாகக்கொண்டு, மன்னார் மற்றும் பூநகரியில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் மூலம் மொத்தம் 484 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், இது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply