பயங்கரவாதியால் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்! இஸ்ரேலில் 10 வயது சிறுவன் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில், பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறப்படுகின்றது.

பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.

இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்  எனவும் தெரியவந்துள்ளது.

எல் கடெர் பகுதியில் பயங்கரவாதி ஒருவனாலேயே பொதுமக்கள் பேருந்தின்
மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து அச்சந்தேக நபரினைத் தேடும்  நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply