மீன்பிடிப் படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் பலி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியிலிருந்து நேற்று (12) இரவு இருவர் கடலில் மீன் பிடிப்பதற்காக இயந்திரப் படகில் சென்றுள்ளனர்.

மீன்பிடித்துவிட்டு மீண்டும் இன்று (13)அதிகாலை முகத்துவாரம் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்ததையடுத்து, ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன் மற்றொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply