
கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே,
கொழும்பு, கஹதுடுவ, முனமலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 68 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 04 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.